• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 7 மாத கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் துடிதுடிக்க கொலை செய்த கணவர்!

7 மாத கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் துடிதுடிக்க கொலை செய்த கணவர்!

pregnant wife killed

pregnant wife killed

சந்தோஷ் தனது கர்ப்பிணி மனைவியை வரதட்சனை கேட்டு ஹாக்கி மட்டையால் கடுமையாக அடித்திருக்கிறார்.

  • Share this:
கணவர் வீட்டினரால் வரதட்சனை கேட்டு பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இப்போதெல்லாம் வரதட்சனை கொலைகள் அதிகரித்துவிட்டன.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் வரதட்சனை கொடுமையை அனுபவித்த கர்ப்பிணி பெண் ஒருவரை அவரின் கணவரே கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கன்ச் மாவட்டத்தில் உள்ள பகவத்நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் சவுத்ரி, இவருக்கும் பிப்ரா பகுதியைச் சேர்ந்த 25 வயது சரோஜ் என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார்.

தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்திருக்கிறார் சரோஜ். 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் சரோஜை, வரதட்சனை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியும், அடித்தும் வந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 30) இரவு ஆத்திரத்தில் இருந்து வந்த சந்தோஷ் தனது கர்ப்பிணி மனைவியை வரதட்சனை கேட்டு ஹாக்கி மட்டையால் கடுமையாக அடித்திருக்கிறார். இதில் படுகாயமடைந்த சரோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்த கொலை சம்பவம் குறித்து சரோஜின் தந்தை ஹரிராம் சவுத்ரி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் அவரை அடித்தே கொலை செய்த சந்தோஷை கைது செய்துள்ளனர்.

Also Read:  சாமியார் பேச்சைக்கேட்டு மனைவியை நிர்வானப்படுத்தி சாம்பல் பூஜை.. சிக்கிய கணவர் குடும்பத்தினர்..

முன்னதாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா எனும் 24 வயது இளம் பெண் வரதட்சனை கொடுமையை தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

விஸ்மயாவின் கணவர், அரசு அதிகாரி, இவர்களுக்கு திருமணம் நடந்தபோது விஸ்மயாவின் பெற்றோர் வரதட்சனையாக 100 பவுன் நகைகள், ஒரு ஏக்கர் நிலம், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான கார் போன்றவற்றை வழங்கியுள்ளனர். இவ்வளவு வரதட்சனை கொடுத்தும் போதாதது என அடம்பிடித்த விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தனக்கு வரதட்சனையாக கொடுத்த கார் பிடிக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக ரூ.10 லட்சத்தை ரொக்கமாக தர வேண்டும் என சண்டைப்போட்டு மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார். இதை பொறுக்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்டார் விஸ்மயா.

Also Read:  17 வயது தங்கச்சி, அப்பா, அம்மா, பாட்டி கொடூர கொலை – 20 வயது கல்லூரி மாணவர் வெறிச்செயல்

விஸ்மயா, சரோஜ் என வரதட்சனை கொடுமையால் பெண்கள் உயிர் பறிக்கப்படும் நிகழ்வுகள் சமூக அவலங்களாக உருவெடுத்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: