Home /News /national /

மதுகுடித்து உல்லாசமாக இருக்க அத்தையை கொன்று நகைகள் கொள்ளை.. புதுச்சேரியில் பரபரப்பு

மதுகுடித்து உல்லாசமாக இருக்க அத்தையை கொன்று நகைகள் கொள்ளை.. புதுச்சேரியில் பரபரப்பு

கைது செய்யப்பட்ட சுரேஷ்

கைது செய்யப்பட்ட சுரேஷ்

Puducherry : புதுச்சேரியில் மூதாட்டி கொலையில் 4 நாட்களுக்கு பிறகு சிக்கிய கொலையாளி, குடி மற்றும் இன்ப வாழ்க்கைக்காக சொந்த அத்தையை கொலை செய்த நபர் கைது.

புதுச்சேரி  சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை (80). கடலூரை பூர்வீகமான கொண்ட இவர் புதுச்சேரியில் சில ஆண்டுகளாக தனித்து வசித்து வருகிறார். கடந்த 5 ஆம் தேதி தனது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை  விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த குடியிருப்பு பகுதி மிகவும் ஏழ்மையான மக்கள் வசிப்பதால் சிசிடிவி ஏதுமில்லை. மேலும் கைரேகையும் சரியாக சிக்கவில்லை. கிடைத்த கைரேகையும் பழைய குற்றவாளிகளுடன் சேரவில்லை. இதனால் கொலையாளியை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மூதாட்டி தனியாக வசிப்பதை அறிந்த உறவினர்கள் யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர்.

இந்நிலையில், அங்குள்ள  செல்போன் டவர், கடலூரில் வசிக்கும் அஞ்சலையின் அண்ணன் கந்தவேலின் மகன் சுரேஷ் (50) என்பவரின் செல்போன் எண்ணை சம்பவம் நடந்த தினத்தில்  கொலை நடந்த நேரத்தில் காட்டியது. அவர் தான் கடைசியாக வீட்டிற்கு வந்து சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர் தலைமறைவாக இருந்ததும், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதனை அடுத்து வடக்கு காவல் கண்காணிப்பாளர் பக்தவத்சலம் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், புதுச்சேரி வனத்துறைக்கு பின்புறம் ஜே.வி.எஸ் நகரில் பதுங்கி இருந்த சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருமணம் ஆன சுரேஷ் அதிக அளவில் மது அருந்தி வந்ததால் மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்று விட்டனர். மது குடிப்பதற்காக தன் தந்தையிடமே அவ்வபோது திருடி வந்த சுரேஷ் ஒரு கட்டத்தில் தனது தந்தையிடம் பணம் எடுக்க முடியாத காரணத்தால், புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த தனது அத்தை வீட்டிற்கு நலம் விசாரிப்பதுபோல வந்து, நடித்து அவரிடம் இருந்த நகைகளை பறித்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொலை செய்யப்பட்ட மூதாட்டி


அதன் படி அங்கு வந்த அவர், அங்கிருந்த கத்தியை எடுத்து கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 53 கிராம் தங்க நகைகளை அங்கிருந்து எடுத்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைகளை உருக்கி விற்று பணத்தை வங்கியில் செலுத்தி விட்டு, மதுகுடித்து உல்லாசமாக  செலவிட்டு வந்துள்ளார்.

Must Read : தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறது.. புதிய கட்டணம் பரிந்துரை

இந்நிலையில், சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டில் உள்ள புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். மது மற்றும் இன்ப செலவிற்காக சொந்த அத்தையையே கொலை செய்த அண்ணன் மகனின் செயல் புதுச்சேரியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, Murder, Puducherry

அடுத்த செய்தி