• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மேட்ரிமோனி வெப்சைட்டில் இப்படியும் நடக்குது மோசடி - மக்களே உஷார்!

மேட்ரிமோனி வெப்சைட்டில் இப்படியும் நடக்குது மோசடி - மக்களே உஷார்!

Matrimony site

Matrimony site

நீங்கள் நினைப்பது போல இது திருமண மோசடி கிடையாது. மாறாக மேட்ரிமோனி தளத்தை பயன்படுத்தி பணமோசடியை நடத்தியிருக்கிறார் மணமகன் போல காட்டிக் கொண்ட ஒரு இளைஞர்.

  • Share this:
செல்போன் யுகத்தில் சாப்பாடு வாங்குவது தொடங்கி, காய்கறி, கோழிக்கறி வாங்குவது வரை எல்லாமே மொபைல் போன் அப்ளிகேஷன் என்றாகிவிட்டது. இதில் திருமணம் மட்டும் விதிவிலக்கா என்ன? தற்போது எல்லாம் திருமண வரன் பார்ப்பதற்கு மேட்ரிமோனி தளங்களையே பொதுமக்கள் பெரும்பாலும் நாடிச் செல்கின்றனர்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற மொபைல் அப்ளிகேஷன்கள் போலவே இந்த மேட்ரிமோனி வெப்சைட்களிலும் கவனமாக இருக்கவில்லை என்றால் நமக்கு தான் ஆபத்து. இதனை உணர்த்தும் விதமாக ஒரு மோசடி தான் மேட்ரிமோனி தளத்தில் அரங்கேறியிருக்கிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல இது திருமண மோசடி கிடையாது. மாறாக மேட்ரிமோனி தளத்தை பயன்படுத்தி பணமோசடியை நடத்தியிருக்கிறார் மணமகன் போல காட்டிக் கொண்ட ஒரு இளைஞர்.

நடந்தது என்ன?

மேட்ரினோனி தளத்தில் அறிமுகமான மகாராஷ்டிர மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 28 வயதாகும் பிரதீக் ஸ்ரீவத்சவா எனும் இளைஞர் தன்னை மோசடி செய்து 2 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் டிஃபன்ஸ் காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Also Read: ஓய்வுக்குப்பிறகு பாலிவுட் படங்களில் நடிக்கப்போகிறாரா மகேந்திர சிங் தோனி?

அவர் அளித்துள்ள புகாரின்படி, ஒரு மேட்ரிமோனி தளத்தில் பிரதீக் ஸ்ரீவத்சவாவின் அறிமுகம் கிடைத்ததாகவும், தன்னை ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் என கூறிக்கொண்டு அறிமுகமான ஸ்ரீவத்சவா தனக்கு ஆப்பிள் பொருட்கள் 40% தள்ளுபடி விலையில் கிடைக்கும் என கூறியுள்ளார். அந்தப் பெண் தனனி நம்ப வேண்டுமென்பதற்காக சந்திப்புக்கான அலுவல் கடிதம் ஒன்றை போலீயாக தயார் செய்து அப்பெண்ணுக்கு பிரதீக் ஸ்ரீவத்சவா அனுப்பியதாகவும், இதன் பின்னர் அவர் மீதான குருட்டு நம்பிக்கையில், ரூ. 62,800, ரூ.63,000 மற்றும் ரூ86,000 என மூன்று தவணைகளில் இரண்டு லேப்டாப் மற்றும் ஐபோன் 12 மாடல் போன் வாங்குவதற்காக அந்த நபருக்கு அப்பெண் அனுப்பியிருக்கிறார்.

சிறிது காலம் கழித்து ஸ்ரீவத்சவா தன்னை ஏமாற்றுவதாக உணர்ந்த அப்பெண், பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Also Read:   25 ஆண்டுகளில் முதல் முறை.. டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட பெரும் சரிவு!

ஸ்ரீவத்சவா போலியான சான்றுகளை கொடுத்து போலியான அக்கவுண்டை அந்த மேட்ரிமோனி தளத்தில் உருவாக்கியதும், பின்னர் அவரின் லோகேஷன் தரவுகளை கொண்டு அவரை சுற்றி வளைத்து போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மாறிவிட்ட சூழலில் திருமண வரன் பார்ப்பது மேட்ரிமோனி தளங்களை நம்பித்தான் இருக்கிறது என ஒரு புறம் இருந்தாலும், இது போன்ற போலிகள் எல்லா பக்கங்களிலும் உலாவுகின்றனர் என்பதால் நாம் இது போன்ற செயலிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே யதார்த்தம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: