தனது மனைவி பெண் அல்ல என்று கூறி கணவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த விசித்திரமான வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் தாக்கல் செய்துள்ள மனுவின் விபரம் -
வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தம்பதியினர் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் முடித்துள்ளனர். பின்னர் மனைவியுடன் கணவர் நெருங்கிப் பழக முயன்றபோது, பெண் உறுப்பில் திறப்பு இல்லாததையும், சிறிய அளவில் ஆண் உறுப்பு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவரை அணுகியபோது மனைவிக்கு இம்பர்ஃபோரேட் ஹைமென் என்ற பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, பெண் உறுப்பின் திறப்பை, கருவளையும் மறைக்கும் நிலை என்பது இந்த பிரச்னையின் விளக்கமாகும்.
தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில், இந்த பிரச்னையை சரி செய்யலாம் என்றும், ஆனால் மனைவி கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் - காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு
இந்த சம்பவங்களால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த மனுதாரர், தனது மாமனாரை அழைத்து நடந்த விபரங்களை கூறி அவரது மகளை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டுள்ளார். பின்னர், அந்தப் பெண்ணும் தனது தந்தையுடன் செல்ல, மேற்கொண்டு அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர் அவர் கணவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதுடன், மாமனாரால் மிரட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
பிரதமர் மோடியுடன் - யோகி ஆதித்யநாத் சந்திப்பு... பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு
இதையடுத்து முதலில் போலீசில் புகார் அளித்த கணவர் பின்னர், விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளார். மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சரியான மருத்துவ ஆதாரங்கள் இல்லை என்று கூறி கணவரின் மனுவை நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்தனர்.
இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக மனைவி பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.