ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்று எரித்த கணவனை கைது செய்தது காவல்துறை!

காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்று எரித்த கணவனை கைது செய்தது காவல்துறை!

மாதிரி படம்

மாதிரி படம்

கோபாலுக்கு திருமணம் ஆனவுடன், லட்சுமி தற்கொலை செய்துகொள்வதாகவும் அதற்கு கோபாலே பொறுப்பேற்க வேண்டும் என மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Andhra Pradesh, India

  ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவரையும் அவரின் காதலியையும் காவல்துறை கைது செய்தது.

  கடந்த 2021 ஆம் ஆண்டு கோபால் என்பவருக்கும் காந்தம்மா என்பவருக்கும் நிச்சயக்கப்பட்ட திருமணம் நடந்தது. ஆனால் அதே ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் காந்தம்மாவை காணவில்லை என அவரின் தாய் காவல்துறையில் புகாரளித்தார்.

  இதையடுத்து காந்தம்மாவின் கணவர் கோபாலை விசாரித்தபோது, அவருக்கு திருமணத்திற்கு முன்பிருந்தே லட்சுமி என்ற காதலி இருந்ததாகவும், பல நாட்கள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் கோபாலுக்கு திருமணம் ஆனவுடன், லட்சுமி தற்கொலை செய்துகொள்வதாகவும் அதற்கு கோபாலே பொறுப்பேற்க வேண்டும் என மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்தது.

  இதையும் படிங்க : சிறை ஜன்னல் கம்பியில் கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு!.

  இறுதியாக அவர்கள் காந்தம்மாவை கொலை செய்துவிடலாம் என முடிவெடுத்தனர். அவர்கள் திட்டமிட்டபடி, முதலில் லட்சுமி சென்று அவருக்கும் கோபாலுக்கும் உள்ள உறவை காந்தம்மாவிடம் முறையாக விளக்கினார்.

  பின் காந்தம்மவின் நம்பிக்கையை பெற்றவுடன், அவரை லட்சுமி தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது லட்சுமி வீட்டில் ஒளிந்திருந்த கோபாலும் லட்சுமியும் ஒரு கோடாரியை வைத்து கொலை செய்து, வீட்டிற்கு அருகில் எரித்தது தெரியவந்தது.

  இந்த குற்றசம்பவத்தை காவல்துறை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆனாலும், கோபால் மற்றும் லட்சுமி ஆகியோரின் முரணான வாக்குமூலத்தால் தான் கண்டறிந்துள்ளனர். இவர்கள் மீதி ஐ.பி.சி 302(கொலை குற்றம்), மற்றும் 201(செய்த குற்றத்திற்கான ஆதாரங்களை மறைத்தல், அல்லது தவறான தகவல்களைத் தருதல்) போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Andhra Pradesh, Crime News, Husband jailed, Murder case