ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலியுடன் ஹோட்டலில் ரூம் போட்ட 61 வயது முதியவர்.. அடுத்து ஏற்பட்ட அதிர்ச்சி

காதலியுடன் ஹோட்டலில் ரூம் போட்ட 61 வயது முதியவர்.. அடுத்து ஏற்பட்ட அதிர்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ரிசப்சனை தொடர்புகொண்ட பெண், தன்னுடன் வந்த முதியவர் திடீரென மயக்கம்போட்டு விழுந்துவிட்டதாக கூறியுள்ளார். உடனடியாக ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மும்பையில் 61 வயது முதியவர் ஒருவர் தனது துணையுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மகாராஷ்டிர மாநிலம்  குர்லா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு 61 வயது மதிக்கத்தக்க நபரும் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும் சென்றுள்ளனர். அப்பெண்ணை தனது காதலி என வரவேற்பறையில் முதியவர் கூறியதோடு, அங்கு ரூம் போட்டுள்ளார். அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் அப்பெண் ரிசப்சனை தொடர்புகொண்டு பதற்றமாக பேசியுள்ளார். தன்னுடன் வந்த நபர் திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் என அவர் கூறியதை தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

  அங்கு முதியவர்  மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முதியவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். முதியவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடன் தங்கியிருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  இதையும் படிங்க: விஸ்மயா வரதட்சணை மரண வழக்கு: கணவருக்கு 10 ஆண்டு சிறை, 12.50 லட்சம் அபராதம்

  மரணமடைந்த நபர் வோர்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆவர். அறையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகவும் அப்போது முதியவர் மது அருந்த முயற்சித்தபோது மயங்கி விழுந்துவிட்டதாகவும் அப்பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், முதியவரின் பிரேதபரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Death, Maharashtra, Sex