மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் டார்ஜிலிங்கில் மகளிர் சுய உதவிக் குழுவால் நடத்தப்படும் சாலையோர கடையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரபலமான உணவான பானி பூரியை செய்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பெருமளவு பகிரப்பட்டுவருகிறது. முதல்வர் மம்தா எளிமையான முறையில் குழந்தைகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் பானி பூரி வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுவால் நடத்தப்படும் சாலையோரக் கடையில் அவர் உதவி செய்தது பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வை அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காணொளியோடு பதிவிட்டுள்ளது. அதில் முதல்வர் மம்தா பானர்ஜி உழைக்கும் மகளிரை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுடன் இணைத்து மேற்கு வங்க மக்களுக்குப் பிடித்த பானி பூரியை செய்து குழந்தைகளுக்கு வழங்கினார் என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முந்தைய டார்ஜிலிங் பயணத்தின் போது மம்தா பிரபல திபெத்திய உணவான 'மோமோஸ்களை(momos)' சாலையோர கடையில் செய்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Saravana Siddharth
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.