பக்கோடா விற்றுக்கொண்டிருக்கும் தேசிய வில்வித்தை வீராங்கனை.. உதவி கிடைக்கவில்லை என வேதனை..

பக்கோடா விற்றுக்கொண்டிருக்கும் தேசிய வில்வித்தை வீராங்கனை.. உதவி கிடைக்கவில்லை என வேதனை..

Mamta tuddu

வில்வித்தையில் தேசிய அளவில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்றிருக்கும் மம்தா டுட்டு (Mamta Tuddu), குடும்ப வறுமை காரணமாக ராஞ்சி சாலையோரத்தில் பக்கோடா விற்பனை செய்து வருவது பலரையும் கலங்க வைத்துள்ளது.

  • Share this:
கொரானா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் தொழில்களில் முடக்கம் ஏற்பட்டு பல நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாரக்கணக்கில் நடந்து, தங்களின் சொந்த மாநிலத்துக்கு சென்றனர். அடிப்படை செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் பலரும் அவதிப்பட்டனர். தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பலரும் ஏற்கனவே செய்துகொண்டிருந்த வேலையை அல்லது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், வில்வித்தையில் தேசிய அளவில் இருமுறை தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனையான மம்தா குடும்ப வறுமையை போக்குவதற்காக ராஞ்சி சாலையோரத்தில் பக்கோடா, காய்கறிகள் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார். தாமோதர்பூர் கிராமத்தில் வசித்து வரும் அவர், வில்வித்தையில் 2010-ம் ஆண்டு ஜூனியர் மற்றும் 2014-ம் ஆண்டு சப் ஜூனியர் பிரிவுகளில் மம்தா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அவருடைய தந்தை பி.சி.சி.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ராஞ்சி வில்வித்தை பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த அவர், கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது, போதுமான வருமானம் இல்லாததால், குடும்பம் நிதிச்சிக்கலில் தத்தளித்துள்ளது. உடன் பிறந்த 7 பேருக்கும் மூத்த சகோதரியாக மம்தா இருப்பதால், குடும்ப பாரம் முழுவதும் அவரது தலையில் இறங்கியுள்ளது. இதனால், விளையாட்டு பயிற்சியை விட்டுவிட்டு 23 வயதில் தன் குடும்பத்துக்காக சாலையோர கடை ஒன்றை அமைத்து, அதில் வரும் வருவாயை வைத்து குடும்பத்தை வழிநடத்தி வருகிறார்.

ராஞ்சி வில்வித்தை பயற்சி மையத்திடம் உதவி கேட்டும், உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறிய மம்தா, தன்னுடைய இந்த நிலைக்கு மோசமான அரசின் நிர்வாகங்களே காரணம் என குற்றம்சாட்டினார். மம்தாவின் நிலை ஊடகங்களின் வழியாக வெளியானதையடுத்து தன்பாத் வில்வித்தை நிர்வாகம் அவருக்கு போதுமான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளது. வில்வித்தையில் வாங்கிய மடல்களை வீட்டில் குவித்து வைத்துள்ள மம்தா, அரசிடமிருந்து முழுமையான உதவி கிடைத்தால் மட்டுமே தன்னுடைய வில்வித்தை பயிற்சியை தொடர முடியும் எனக் கூறியுள்ளார்

2009 முதல் 2011-ம் ஆண்டு வரை மம்தா துட்டுக்கு பயிற்சியளித்த வில்வித்தை பயிற்சியாளர் முகமது சாம்ஷாத் (Shamshad) பேசும்போது, மம்தா மிகவும் திறமையானவர் என்று கூறினார். அவரின் தற்போதைய நிலை தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஷாம்ஷாத் வேதனை தெரிவித்தார்.
Published by:Ram Sankar
First published: