மேற்குவங்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி: சொந்த தொகுதியில் தோல்வி!

மேற்குவங்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி: சொந்த தொகுதியில் தோல்வி!

மம்தா பானர்ஜி

நந்திகிராமில் சவால் விடுத்தது போலவே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்று முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்துள்ளார்.

  • Share this:
மேற்குவங்கத்தில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜி தொடர்ந்து 3வது முறையாக மேற்க்குவங்கத்தின் முதல்வராக ஆக இருக்கிறார். இருப்பினும் ‘ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் டெட்’ என்ற கூற்றுக்கு ஏற்றார் போல தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவியிருக்கிறார்.

5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலே நாடு முழுவதும் பரவலாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலம் என்றால் அது மேற்குவங்கம் தான். முந்தைய தேர்தலில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த பாஜக, இந்த முறை தீதி மம்தா பானர்ஜிக்கு கடும் குடைச்சலைக் கொடுத்தது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18-ல் வெற்றி பெற்ற தெம்புடன் சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக பிரமாதமாக களம் இறங்கியது. போதாக்குறைக்கு திரிணாமுல் காங்கிரஸின் ஹெவி வெயிட் தலைவரும், மம்தாவுக்கு வலதுகரமாக திகழ்ந்தவருமான முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி பாஜகவுக்கு பக்கபலமாக மாறினார்.

இது போதாதென்று நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரிக்கு எதிராக களம் கண்டார் மம்தா பானர்ஜி. நந்திகிராமில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை வீழ்த்துவேன் என்று சுவேந்து சூளுரைத்தார். தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் முன்னதாகவே நந்திகிராமில் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் மம்தாவின் காலில் அடிபட அது பெரிய களேபரமானது.

இந்நிலையில் மம்தாவுக்காக தேர்தல் வியூகங்களை வகுக்கும் பொறுப்பில் பணியமர்த்தப்பட்ட இந்தியாவின் மிகப்பெரும் அரசியல் சாணக்கியர் பிரசாஷ்ந் கிஷோர் (திமுகவுக்கு இவர் தான் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தார்) பாஜகவுக்கு எதிராக பெர்சனல் ரிவெஞ்சில் குதித்தார். பாஜக 100 இடங்களை கூட தாண்டாது, மேற்குவங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சி தான், இது பலிக்கவில்லை என்றால் இந்த தேர்தல் வியூக பணியில் இருந்தே ஒதுங்கிவிடுகிறேன் என்று சவால் விடுத்தார்.

பல்வேறு கருத்துக்கணிப்புகளும் பாஜக அங்கு ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில் அனைத்தையும் தவிடு பொடியாக்கி இன்று அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் தொடர்ந்து 3வது முறையாக மம்தா பானர்ஜி வெற்றியை ருசித்துள்ளார்.

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: பிரம்மாண்ட கூட்டணி போட்டும் காங்கிரஸ் தோல்வி!


திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 215 இடங்களை கைப்பற்றுகிறது. இதே போல அக்கட்சிக்கு கடும் நெருக்கடி அளித்த பாஜக 75 இடங்களை பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

காங்கிரஸ், இடதுசாரிகள், ISF ஆகிய கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்து களம் கண்டன. ஒரு காலத்தில் மாநிலத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியாலும் இந்த முறை ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாதது பெரும் சோகம். அதே நேரத்தில் அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த ISF ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

தேர்தலில் தான் தோல்வி மன உறுதியை இழக்கவில்லை - காங்கிரஸ்


ஹெவிவெயிட் ஸ்டார் தொகுதியான நந்திகிராமில் சவால் விடுத்தது போலவே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்று முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்துள்ளார். அவர் சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை வீழ்த்தியிருக்கிறார்.
Published by:Arun
First published: