முகப்பு /செய்தி /இந்தியா / ‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம்

‘தொல்லை’ கொடுக்கும் ஆளுநர் இல்லாமலேயே பட்ஜெட் உரை நிகழ்த்திய மம்தா: பாஜக கண்டனம்

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மே,வங்க மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதில் கவர்னர் ஜகதீப் தங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மே,வங்க மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதில் கவர்னர் ஜகதீப் தங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

மேலும் கவர்னர் உரை இல்லாமலேயே மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பட்ஜெட் உரையை நிகழ்த்தினார், இது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் தங்கள் அரசை ஆட்சி செய்ய விடாமல் கடும் தொல்லைகளைக் கொடுப்பதாக முதல்வர் மம்தா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில் கவர்னர் இல்லாமல் நடந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். ஆளுநர் உரை இல்லாததை கண்டித்து மாநிலபா.ஜ., எம்.எல்.ஏக்கள் சட்டசபையை புறக்கணித்து வெளியேறினர் இது குறித்து மாநில பா.ஜ., தலைவர் கோஷ் கூறுகையில் மம்தாவின் முடிவு கண்டிக்கத்தக்கது.கவர்னரின் உரை இல்லாமல் எவ்வாறு நடத்தப்படுகிறது. என்றார். மேலும் பா.ஜ., எம்எல்ஏ மனோஜ் டிக்கா என்பவர் கூறுகையில் இது ஒரு அவமானம். ஆகவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு சில மாதங்களில் சட்டசபைக்கான தேர்தல்நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,கட்சியினரிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பாஜக களம் இறங்கி உள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநர் தங்கர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

கடந்தசில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா மே.வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கு குறித்து மாநில கவர்னர் ஜகதீப் தங்கர்கவலை தெரிவித்தார். இதனையடுத்து ஆளும் கட்சிக்கும் கவர்னருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

மமதா பானர்ஜியோ ஆளுநர் தன் பதவியைத் துஷ்பிரயோகம் செய்து மத்தியில் ஆளும் பாஜக-வின் இடைத்தரகராகச் செயல்படுகிறார் என்று கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

பொதுவாகவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் அங்கு கடும் தொல்லைகள் ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால், புதுச்சேரியில் நாராயணசாமி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் மூலம் தொல்லைக் கொடுக்கப்படுவதாக இவர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

First published:

Tags: BJP, Mamata banerjee, West Bengal Election