மம்தா முதல்வராக பதவி ஏற்கக்கூடாது - சுவேந்து அதிகாரி அதிரடி

மம்தா பானர்ஜி.

மம்தா முதலமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார் சுவேந்து அதிகாரி.

 • Share this:
  மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பரிசாக அளித்துள்ளது பா.ஜ.க தலைமை. மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தாலும் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய மம்தா தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார்.

  மம்தாவின் விரலை வைத்தே அவரது கண்களை குத்தியது பாஜகவின் சாமர்த்தியம்தான். மம்தாவின் முதல்வர் நாற்காலிக்கே வேட்டு வைத்தது பாஜக. மம்தா முதலமைச்சராக பதவி ஏற்கக்கூடாது என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார் சுவேந்து அதிகாரி. மம்தாவின் வலதுகரம் போல் செயல்பட்டு வந்த சுவேந்து அதிகாரி சமீபத்தில் பா.ஜ.க பக்கம் சேர்ந்தார். சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராமில் முடிந்தால் வெற்றி பெறுங்கள் என மம்தாவை சீண்டியது பாஜக தலைமை. சொந்த தொகுதியை விட்டு நந்திகிராமில் போட்டியிட்டு 1600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

  Also Read: கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சையில் குடும்ப மருத்துவர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் - மகாராஷ்டிரா மருத்துவர் தகவல்

  சுவேந்து அதிகாரி நியூஸ்18-க்கு அளித்துள்ள பேட்டியில், “மம்தா முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள கூடாது. அவரது கட்சி வென்றிருக்கலாம். ஆனால் நந்திகிராம் மக்களால் அவர் நிரகரிக்கப்பட்டுள்ளார். கேரளத்தில் 1996 சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிப் பெற்றது. அந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறியப்பட்ட அச்சுதானந்தன் தோல்வியடைந்தார். அவர் முதலமைச்சர் பதவியை ஏற்கவில்லை.

  கடந்த 10 ஆண்டுகளாக நான் இந்த அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். அப்போது எதிர்க்கட்சியினருக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மரியாதை கிடைக்காததை நான் பார்த்துள்ளேன். இப்போது நான் எதிர்க்கட்சி தலைவராகியுள்ளேன். எதிர்க்கட்சி என்ற முறையில் ஆக்கப்பூர்வமாக எனது பணியை செய்வேன்” எனக் கூறியுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: