• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திரிபுராவில் வீட்டுக்காவலில் ஐ-பேக் ஊழியர்கள் - மீட்பதற்கு அமைச்சர்களை அனுப்பிய மம்தா பானர்ஜி

திரிபுராவில் வீட்டுக்காவலில் ஐ-பேக் ஊழியர்கள் - மீட்பதற்கு அமைச்சர்களை அனுப்பிய மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மிசோரத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களை மீட்க மம்தா பானர்ஜி அமைச்சர்களை அனுப்பியுள்ளார்.

  • Share this:
    அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர்,  ஐ-பேக் என்ற நிறுவனத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணியை சட்டப்பூர்வ தொழிலாக செய்துவருகிறார். 2014-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் மோடி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டார். அப்போது, மோடிக்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்.

    தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கும், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். பிரசாந்த் உறுதியளித்தபடியே இரண்டு மாநிலத்திலும் அவர் பணியாற்றிய கட்சி வெற்றி பெற்றது. இதற்கிடையில், பிரசாந்த் பிரதமர் மோடிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டுவருகிறார். 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டணி அமைப்பதற்கு எதிர்கட்சிகளை ஒன்றுதிரட்டிவருகிறார்.

    இந்தநிலையில், திரிபுராவில் 2023-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்ற ஐ-பேக் குழுவின் 23 பேர் திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், அந்த 23 பேரும் அவர்களுடைய வேலைக்காக ஹோட்டலிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து புகார் தெரிவித்த ஐ-பேக், ‘எங்கள் ஊழியர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. நாங்கள் இந்த விவகாரம் குறித்து கவனித்து வருகிறோம்’ என்று தெரிவித்திருந்தது. அதற்கு திரிபுரா காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஐ-பேக் குழுவினரை மீட்பதற்காக மேற்கு வங்க அமைச்சர்கள் பிரட்யா பாசு, மோலாய் கட்டக், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ரிடாப்ரடா பானர்ஜி ஆகியோர் திரிபுராவுக்குச் செல்கின்றனர். இந்தச் சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: