மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு வெளியேறும் கவுன்டவுன் தொடங்கிவிட்டது: பிரதமர் மோடி

மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு வெளியேறும் கவுன்டவுன் தொடங்கிவிட்டது: பிரதமர் மோடி

மோடி

மம்தா பானர்ஜியும் இந்தியாவின் மகள் தான். அவர் தாக்கப்பட்டதை எண்ணி வருந்தியதாக பிரதமர் கூறினார்.

 • Share this:
  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்குவங்க மாநிலம் புருலியாவில், பாஜக சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்தியாவின் மகள் தான் என்றும், அவர் தாக்கப்பட்டதை எண்ணி வருந்தியதாகவும் கூறினார். மே 2ம் தேதியான வாக்கு எண்ணிக்கை தினத்தன்று, மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தை விட்டு வெளியேறுவார் எனவும் அவர் விமர்சித்தார். புருலியா பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவினாலும், மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

  காரக்பூரில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் பரப்புரையில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜக சார்பில் பணம் விநியோகிக்கப்பட்டால் அதன் முன் தலைகுனிய வேண்டாம் என்றும், அது மக்களின் பணம் எனவும் கூறினார். காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்டுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டாம் எனவும் மம்தா கேட்டுக் கொண்டார். இந்நிலையில் கேரள சட்டமன்ற தேர்தலில், திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி, வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

  மேலும் படிக்க... புதுச்சேரியில் ரூ. 2 கோடியை பறிமுதல் செய்த பறக்கும்படையினர்

  கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு கோழிக்கோடு தெற்கு தொகுதியில், நூர்பினா ரஷீத் என்ற பெண் வேட்பாளரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் களம் இறக்கியுள்ளது.

  அசாம் மாநிலத்திலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள AIUDF கட்சியின் தலைவர் பத்ருதீன் அஜ்மலின் வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்த பின், இந்தியா இஸ்லாமிய நாடாக மாற்றப்படும் என அவர் பேசுவது போல் அந்த வீடியோவில் காட்சிகள் உள்ளன. 2019ம் ஆண்டு அஜ்மல் பங்கேற்ற பிரசாரத்தின் உரை, எடிட்டிங் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  மேலும் படிக்க... மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த கவுன்சிலர்கள்!

  இதற்கிடையே அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இன்றைய கால கட்டத்தில் காங்கிரஸ் மிகவும் வலுவிழந்துவிட்டது என்றும், யாருடன் வேண்டுமானாலும் அவர்கள் கூட்டணி அமைப்பார்கள் எனவும் விமர்சித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: