மோடியைச் சந்திக்கும் மம்தா பானர்ஜி! அரசியல்களத்தில் பரபரப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார்.

Web Desk | news18
Updated: September 16, 2019, 7:11 PM IST
மோடியைச் சந்திக்கும் மம்தா பானர்ஜி! அரசியல்களத்தில் பரபரப்பு
மம்தா பானர்ஜி, மோடி
Web Desk | news18
Updated: September 16, 2019, 7:11 PM IST
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார்.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்துவருகிறார். பா.ஜ.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, மேற்குவங்கத்தில் பா.ஜ.க.வினருக்கும் திரிணாமுல் காங்கிரஸாருக்கும் கடும் மோதல்கள் ஏற்பட்டன. இதற்கிடையில், சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிக்கியுள்ளனர். கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரும் அந்த வழக்கில் சி.பி.ஐ பிடியில் சிக்கியுள்ளார்.


இந்தநிலையில், மேற்கு வங்க முதல்வர் அலுவலகத்திலிருந்து பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 18-ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. பிரதமர் மோடிக்கு, மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

Also see:

First published: September 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...