• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரச்சாரம் செய்ய தடைவிதித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி போராட்டம்

பிரச்சாரம் செய்ய தடைவிதித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி போராட்டம்

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

  • Share this:
    மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடந்து வருகிறது. மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கு தான் இப்போது நேரடி போட்டி வருகிறது. தேர்தல் அறிவித்ததில் இருந்து பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே ஆங்காங்கே மோதல் போக்கு இருந்தது. 4-ம் கட்ட வாக்குப்பதிவுகளில் வன்முறை வெடித்து துப்பாக்கிச்சூடு நடந்தது. பாஜக வெளிமாநிலங்களில் இருந்து குண்டர்களை இறக்கியுள்ளது என மம்தா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். பிரச்சார மேடைகளில் பாஜவையும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தொடர்ந்து கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

    மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2-ம் தேதி வீட்டுக்கு சென்றுவிடுவார் என பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மம்தா, ‘பிரதமர் மோடி அண்மையில் வங்கதேசம் சென்று வந்தார். இப்போது அங்கு வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அவர் எங்கு சென்றாலும் இப்படி தான் நடக்கிறது. நான் மிகவும் வெட்கப்படுகிறேன், வேதனைப் படுகிறேன். இதுபோன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. எல்லை மீறி பேசுகிறார். பாஜக வீழ்ந்தால் தேசம் தப்பி பிழைக்கும்” என்றார்.

    இதனையடுத்து, மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணிநேரம் தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கொல்கத்தாவிலுள்ள காந்தி சிலை முன்பு மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.
    \

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: