திடீரென டீக்கடைக்குள் நுழைந்து டீ போட்ட முதலமைச்சர் மம்தா! வைரல் வீடியோ

முதலமைச்சரின் வருகையை அறிந்த பொதுமக்கள் அந்தப் பகுதியில் கூடினர்.

Web Desk | news18
Updated: August 22, 2019, 11:39 AM IST
திடீரென டீக்கடைக்குள் நுழைந்து டீ போட்ட முதலமைச்சர் மம்தா! வைரல் வீடியோ
டீ போட்ட முதலமைச்சர் மம்தா
Web Desk | news18
Updated: August 22, 2019, 11:39 AM IST
மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேனீர் கடைக்கு சென்று தேனீர் கலந்து கொடுத்தது பொதுமக்களைக் கவர்ந்தது.

திகா பகுதியில் பாதுகாப்புப் படையினர் புடைசூழ சென்று கொண்டிருந்த மேற்குவங்க முதலமைச்சர் திடீரென வாகனத்தை நிறுத்துமாறு கூறினார். சாலையோரம் இருந்த தேநீர் கடைக்கு சென்ற மம்தா பானர்ஜி, கடையின் உரிமையாளரிடமிருந்து தேநீரை கலக்கும் குடுவையை வாங்கி தேநீர் தயாரித்தார்.

அதன் பின்னர், கடைக்கு வெளியே மர மேஜையில் அமைச்சரவை சகாக்களான சுவேண்டு அதிகாரி, சுப்ரதா முகர்ஜி ஆகியோருடன் அமர்ந்து கொண்டார். தான் தயாரித்த அந்த தேனீரை விநியோகிக்குமாறு உரிமையாளரை கேட்டுக் கொண்டார். முதலமைச்சரின் வருகையை அறிந்த பொதுமக்கள் அந்தப் பகுதியில் கூடினர். மம்தாவின் இந்த செயல் அங்கு கூடியிருந்த பொது மக்களை வெகுவாக கவர்ந்தது.
Loading...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...