மே 5-ம் தேதி மேற்கு வங்கத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி 3-வது முறையாக மே 5-ம் தேதி பதவியேற்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பார்தா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி பா.ஜ.க ஆட்சியமைக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அந்த கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜ.க 77 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

  காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி எந்த தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும், மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான சுவேந்து அதிகாரியிடம் 2,000-த்துக்கு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

  இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையைப் பெற்றதால் அவர் மூன்றாவது முறையாக முதல்வராவது உறுதியானது. இந்தநிலையில், அவர் மே 5-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக 3-வது முறையாக பதவியேற்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பார்தா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: