Home /News /national /

4 நாள் பயணமாக டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி- பிரதமர், எதிர்கட்சித் தலைவர்களைச் சந்திக்க திட்டம்

4 நாள் பயணமாக டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி- பிரதமர், எதிர்கட்சித் தலைவர்களைச் சந்திக்க திட்டம்

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர், பிரதமர் மோடி மற்றும் எதிர்கட்சித் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

    குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராடிவந்த மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எனவே, இந்தக் கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கிடையில், இந்தக் கூட்டத்தில் முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இந்தநிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக இன்று டெல்லி செல்லவுள்ளார். இந்த பயணத்தின் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். அவரிடம் எல்லைப் பாதுகாப்பு படையின் எல்லைகளை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மம்தா பானர்ஜி மீண்டும் பிரதமரான பிறகு இரண்டாவது முறையாக டெல்லி செல்கிறார். மோடி மட்டுமல்லாது முக்கிய எதிர்கட்சித் தலைவர்களையும் மம்தா பானர்ஜி சந்தித்து பேசவுள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்யவுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து திரிபுராவில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் புகார் அளிக்கவுள்ளனர். திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேரந்த இளம் தலைவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக டெல்லியில் அக்கட்சி போராட்டம் நடத்ததிட்டமிட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Mamata banerjee

    அடுத்த செய்தி