Home /News /national /

காங்கிரஸ் அழைப்பை நிராகரிக்கும் மம்தா பானர்ஜி: ஒற்றுமையில்லாத எதிர்க்கட்சிகள்..

காங்கிரஸ் அழைப்பை நிராகரிக்கும் மம்தா பானர்ஜி: ஒற்றுமையில்லாத எதிர்க்கட்சிகள்..

Mamata banerjee - TMC

Mamata banerjee - TMC

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் இடத்தை கையில் எடுக்க திரிணாமுல் காங்கிரஸ் காய்நகர்த்தி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பை திரிணாமுல் காங்கிரஸ் நிராகரித்திருப்பதன் மூலம் எதிர்கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

பாஜக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்துள்ள நிலையில், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் நாளடைவில் பலம் குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தும், பல மாநிலங்களில் தலைவர்களிடையே ஒற்றுமையில்லாததால் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பையும் கூட இழந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இத்தனை குழப்பங்கள் நிலவுவதால் பாஜகவுக்கு அக்கட்சியால் சரிசம போட்டியை ஏற்படுத்த முடியாமல் போயிருக்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் இடத்தை கையில் எடுக்க திரிணாமுல் காங்கிரஸ் காய்நகர்த்தி வருகிறது. சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ராகுல்காந்தி குறித்து பகிரங்கமாக விமர்சிக்க இருகட்சிகளுக்கிடையேயும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Mamata banerjee


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே நாளை (நவம்பர் 29) பாராளுமன்றத்தில் உள்ள அவரது சேம்பரில் அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடவும், எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் செயல்பட வேண்டிய அம்சங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

Also read:   அரசு வேலைக்கு பணம்: எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி கைது...

இதனிடையே காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் இந்த அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. மம்தா தான் திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் உள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பாஜக மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து தான் திரிணாமுல் அரசியல் செய்து வருவதாகவும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு முன் காங்கிரஸ் கட்சி தனது கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியை வலுவிலக்கச் செய்யும் வேலையில் திரிணாமுல் காங்கிரஸ் ஈடுபட்டிருப்பதாகவும், இப்படி செய்வதால் அக்கட்சி பாஜகவுக்கு மறைமுகமாக உதவி வருவதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது திரிணாமுல் காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Also read:   உகாண்டாவிடம் வேலையைக் காட்டிய சீனா: ஒரே விமான நிலையமும் பறிபோகும் அபாயம்..

தற்போது காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிப்பதால், காங்கிரஸ் கூட்டத்தில் இல்லாத ஏனைய கட்சிகளான ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளும் கூட்டத்தை புறக்கணிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இதற்கு முன் கூட்டிய எதிர்கட்சிகளின் கூட்டத்தை மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

 

 
Published by:Arun
First published:

Tags: BJP, Congress, Mamata banerjee, TMC

அடுத்த செய்தி