மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பேனா? விளக்கமளித்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிஸுக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவிவருகிறது.

news18
Updated: May 28, 2019, 11:31 PM IST
மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பேனா? விளக்கமளித்த மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
news18
Updated: May 28, 2019, 11:31 PM IST
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. பா.ஜ.க கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜ.க மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனையடுத்து, மோடி, இரண்டாவது முறையாக மே 30-ம் தேதி பதவியேற்கவுள்ளார்.

டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் பதவியேற்கு விழா நடைபெறவுள்ளது. அதற்காக, மாநில முதல்வர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ரஜினி, கமல்ஹாசனுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘நான் மற்ற முதலமைச்சர்களிடமும் பேசினேன். இது ஒரு பதவியேற்பு விழா. நாங்கள் அதில் கலந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் அந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன்’ என்று தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிஸுக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவிவருகிறது. நேரடியாகவே, மம்தா பானர்ஜிக்கும், மோடிக்கும் இடையே வார்த்தைப் போர் நிலவிவரும் நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்பதாக கூறியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

Loading...

First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...