• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நீங்கள் இந்தியப் பிரதமரா? பாகிஸ்தான் தூதரா?- மோடியை வினவும் மம்தா பானர்ஜி..!

நீங்கள் இந்தியப் பிரதமரா? பாகிஸ்தான் தூதரா?- மோடியை வினவும் மம்தா பானர்ஜி..!

மம்தா பேனர்ஜி

மம்தா பேனர்ஜி

'குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் எங்களின் இரண்டாம் சுதந்திர போராட்டம் ஆகும்'.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியையும் பாகிஸ்தான் உடன் இந்தியாவை அவர் ஒப்பிட்ட விதத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்கம் மாநிலம் சிலுகுரியில் நடந்த போராட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

    அப்போது பேசிய அவர், ’எப்போதும் எது நடந்தாலும் உடனே பாகிஸ்தானைப் பற்றியே மோடி பேசுவது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அவர் பேசுகையில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னர் நம் ஒவ்வொருவரின் குடியுரிமையையும் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது அவமானம். நம் இந்தியா நீண்ட பாரம்பரியமும் நிறைந்த கலாசாரமும் கொண்ட நாடு. ஆனாலும், எப்போதும் நம் பிரதமர் பாகிஸ்தானுடன் நம்மை ஒப்பிட்டுப் பேசுவது ஏன்? அவர் இந்தியாவின் பிரதமரா? பாகிஸ்தானின் தூதரா?

    யாராவது வேலை இல்லை, எனக்கு வேலை தாருங்கள் எனக் கேட்டால் உடனே பாகிஸ்தானுக்குப் போங்கள் எனப் பதிலளிப்பார் பிரதமர். பாகிஸ்தானைக் குறித்து அந்நாட்டு மக்கள் பேசட்டும். நாம் நம் நாட்டைப் பற்றிப் பேசுவோம். வேண்டுமென்றே பாகிஸ்தானின் பெயரை எந்தப் பிரச்னை என்றால் அதை திசை திருப்பப் பயன்படுத்துகிறார்கள்.

    தேசிய குடிமக்கள் பதிவை நாடு முழுவதும் மேற்கொள்ள மாட்டோம் என்கிறார் மோடி. ஆனால், நாடு முழுவதும் கட்டாயமாக அமல்படுத்துவோம் என்கின்றனர் அமைச்சர்கள். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் எங்களின் இரண்டாம் சுதந்திர போராட்டம் ஆகும்” என்றார்.

    மேலும் பார்க்க: மெகபூபா முஃப்தியின் மகளுக்கு வீட்டுக்காவல்... காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய கைதுப்படலம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: