Pegasus Scandal: பெகாசஸ் உளவு விவகாரத்தில் அதிரடி காட்டிய மம்தா பானர்ஜி!

பெகாசஸ்

நாட்டிலேயே முதன்முறையாக பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் ஒன்றை மம்தா பானர்ஜி அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.வி. லோகூர் மற்றும் ஜோதிர்மாய் பட்டச்சாரியா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்

  • Share this:
    பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை ஆணையத்தை அமைத்து மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

    உலகின் முக்கிய தலைவர்களும் பத்திரிகையாளர்களும் இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவுக் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மொத்தமுள்ள 50 ஆயிரம் பேரில், இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் யூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், முன்னாள் தேர்தல் அதிகாரி அசோக் லவசா, முன்னணி பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேர் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த விவகாரம் இந்தியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் முடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ராஜினாமா!


    இதேபோல், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.  ஜனநாயகத்தின் மூன்று தூணாக உள்ள தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை பெகாசஸ் மென்பொருளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று விமர்சித்ததோடு அல்லாமல் தனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்படுவதாக அவர் கூறியிருந்தார். மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியும் கண்காணிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி...


    இந்நிலையில்,  நாட்டிலேயே முதன்முறையாக பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் ஒன்றை மம்தா பானர்ஜி அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.வி. லோகூர் மற்றும் ஜோதிர்மாய் பட்டச்சாரியா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இதையும் படிக்க: உளவு கருவிகள் உள்ளதால்தான் மக்கள் நிம்மதியாக உறங்க முடிகிறது; பெகாசஸ் தயாரிப்பு நிறுவனம்!


    பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தும் அல்லது நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மத்திய அரசு மௌனமாக உள்ளதால் தற்போது நாங்கள் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளோம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்த சிறு முயற்சி மற்றவர்களையும் விழிக்க செய்யும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published: