நந்திகிராமில் வெற்றி உறுதி.. என்னை கட்டுப்படுத்த வேண்டாம் - மோடி கேள்விக்கு மம்தா பதிலடி

நந்திகிராமில் வெற்றி உறுதி.. என்னை கட்டுப்படுத்த வேண்டாம் - மோடி கேள்விக்கு மம்தா பதிலடி

மம்தா பானர்ஜி

மம்தா தனது சொந்த தொகுதியான பவானிபூரை விட்டுவிட்டு நந்திகிராமில் இம்முறை களம் கண்டுள்ளார்.

  • Share this:
    மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி வேறு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது என்றார்.

    “மம்தா நந்திகிராமில் போட்டியிடுவதற்காக பவானிபூரை விட்டு வெளியேறினார். இங்கு வந்த பின்னர் தான் செய்த தவறை உணர்ந்தார். மம்தா மூன்று நாட்கள் இங்கு முகாமிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். நந்திகிராமில் தோல்வியடைவது உறுதி என மம்தாவுக்கு தெரிந்துவிட்டது. அவர் வேறு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இது உண்மையா என மம்தாதான் கூற வேண்டும். நீங்கள் நந்திகிராம் சென்றீர்கள் அந்த மக்கள் ஒரு பதிலை அளித்தனர். இப்போது வேறு எங்கோ செல்ல திட்டமிடுகிறீர்கள் வங்காள மக்கள் உங்களுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்” என பிரதமர் மோடி கூறினார்.

    இதற்கு பதிலளித்துள்ள மம்தா, “ நந்திகிராம் தொகுதியில் நான் வரலாறு காணாத வெற்றியை பெறுவேன். பிரதமருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். முதலில் உங்களது உள்துறை அமைச்சரை கட்டுப்படுத்துங்கள் பிறகு வந்து எங்களைக் கட்டுப்படுத்தலாம். நான் உங்கள் கட்சியை சேர்ந்தவர் கிடையாது. எனவே எங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டாம். ” என பதிலளித்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. இதில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் நேற்று தேர்தலை சந்தித்தது. மம்தா தனது சொந்த தொகுதியான பவானிபூரை விட்டுவிட்டு நந்திகிராமில் இம்முறை களம் கண்டுள்ளார். நந்திகிராமில் இவரை எதிர்ந்து பாஜக தரப்பில் சுவேந்து அதிகாரி என்பவர் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அந்த சுவேந்து அதிகாரியை வீழ்த்தவே நந்திகிராமில் போட்டியிட்டுள்ளார் மம்தா.

    சுவேந்து அதிகாரி மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 2016-ல் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் சமீபத்தில் பா.ஜ.க பக்கம் சென்றுவிட்டார். இதன் காரணமாக மம்தா இங்கு களம்கண்டுள்ளார். நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவின்போது பா.ஜ.க தொண்டர்களுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. மத்திய துணை ராணுவப்படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    Published by:Ramprasath H
    First published: