கொல்கத்தாவில் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி உரையாற்றிய போது ஜெய் ஸ்ரீராம் என்று கூட்டத்தினர் முழக்கமிட்டதால் அவர் பேச மறுத்துவிட்டார்.
இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நோதாஜி சுபாஷ் சந்திரா போஸின் 125-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருஉருவ படத்திற்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
நேதாஜியின் பிறந்த நாள், இனி "பராக்கிராம் திவாஸாக" கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் நடைபெறும் முதல் பராக்கிராம் திவாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நேதாஜியை கௌரவப்படுத்தும் விதமாக அஞ்சல் தலைகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்ற மேடைக்கு வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்தரவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்', மோடி, மோடி என முழக்கமிட்டனர்.
இதனால் அதிருப்பதி அடைந்த மம்தா, “இது அரசு நிகழ்ச்சி. அரசியல் நிகழ்ச்சி அல்ல. நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்து விட்டு இதுப்போன்று நடப்பது சரியல்ல. அரசாங்க விழாவில் கண்ணியம் காக்க வேண்டும்“ என்று கூறிவிட்டு விழாவில் பேச மறுத்துவிட்டு சென்றுவிட்டார்.