பணமதிப்பிழப்பு நடவடிக்கை மீது விசாரணை...! மம்தா பானர்ஜி தேர்தல் அறிக்கை

அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் பங்கேற்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

news18
Updated: March 27, 2019, 8:17 PM IST
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மீது விசாரணை...! மம்தா பானர்ஜி தேர்தல் அறிக்கை
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
news18
Updated: March 27, 2019, 8:17 PM IST
மக்களவைத் தேர்தலில் தங்கள் தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்டால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மீது விசாரணை நடத்தப்படும் என்றும் மீண்டும் திட்ட கமிஷன் கோண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தங்கள், “100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டம் 200 நாட்களாக நீட்டிக்கப்படும். ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஊதியம் இரட்டிப்பாக்கப்படும் .

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும் அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை மீது விசாரணை நடத்தப்படும். நிதி ஆயோக்கால் எந்தப் பயனுமில்லை. மீண்டும் திட்ட கமிஷன் கோண்டு வரப்படும்.ஜிஎஸ்டி-ஐ மறு ஆய்வு செய்வோம். இது கண்டிப்பாக மக்களுக்கு உதவும் என்றால் அப்படியே தொடர்வோம்” என்று அறிவித்துள்ளார்.

அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் பங்கேற்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...