தென் மாநிலங்களில் பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது! மம்தா பானர்ஜி உறுதி

இந்தமுறை, மேற்கு வங்கமும் உத்தர பிரதேசமும் மத்திய அரசை தீர்மானிப்பதில் முக்கியமான மாநிலங்களாக இருக்கும்.

தென் மாநிலங்களில் பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது! மம்தா பானர்ஜி உறுதி
மம்தா பானர்ஜி
  • News18
  • Last Updated: April 18, 2019, 9:09 PM IST
  • Share this:
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு மத்தியில் புதிய கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. முன்னதாக, நியூஸ் 18 தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷியின் நேர்காணல் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அதில் பேசிய மம்தா பானர்ஜி, ‘இந்தமுறை, மேற்கு வங்கமும் உத்தர பிரதேசமும் மத்திய அரசை தீர்மானிப்பதில் முக்கியமான மாநிலங்களாக இருக்கும். இந்த இரண்டு மாநிலங்களும் அரசை அமைக்கும். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க எம்.பிகள் பெருமளவில் குறையும். பின்னர், அவர்களுக்கு எங்கிருந்து எம்.பிக்கள் கிடைக்கும். காங்கிரஸால் தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்க முடியாது. அவர்கள் எப்படி செய்ய முடியும்? எல்லா மாநிலக் கட்சிகளும் தற்போது வலிமையாக உள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் ஆட்சி அமைக்காது.

புதிய கூட்டணி மத்தியில் ஆட்சியை உருவாக்கும். அதற்காக காத்திருப்போம். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, பீகார், அசாம் மாநிலத் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்போம்’ என்று தெரிவித்தார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:
First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading