Home /News /national /

பிரதமர் மோடி பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் மம்தா பானர்ஜி?

பிரதமர் மோடி பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் மம்தா பானர்ஜி?

மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என்று தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது. மம்தா பானர்ஜியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க தீவிர முயற்சி செய்துவருகிறது. அதனால், பா.ஜ.கவுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்றுவருகிறது. மம்தா பானர்ஜி, மோடியையும், அமித்ஷாவையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இந்தநிலையில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர்கள், சில மத்திய அமைச்சர்கள், மூத்த மத்திய அரசு அதிகாரிகளை உள்ளிட்ட நிதி ஆயோக் குழுவின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

    இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமைதாங்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் விவசாயம், உள்கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கெனவே, மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். அவர், நிதி ஆயோக் ஒரு தேவையில்லாத முயற்சி. நிதி ஆதாரம் இல்லாத ஒரு அமைப்பு’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Mamata banerjee, Niti Aayog

    அடுத்த செய்தி