பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்கவேண்டும் - மம்தா பானர்ஜி

பிரதமர் நரேந்திர மோடியை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.

  • Share this:


    கடந்த மே மாதம் மேற்குவங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மம்தாபானர்ஜி காலதாமதமாக வந்தார்.மனுவை அளித்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு மம்தா செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது,  மம்தா பானர்ஜி, மூன்றாம் அலைக்கு முன்பாக தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக அவர் கூறினார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேச இருப்பதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 28, 2021)

    முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர் பல முக்கியத் தலைவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘மோடியுடனான இன்றைய சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. கொரோனா மற்றும் தடுப்பூசிகள், மருத்துகள் தேவை குறித்து எடுத்துரைத்தேன். மாநிலத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தேன்.
    மேற்கு வங்கத் தேர்தல் வெற்றி தொடர்பாக நாங்கள் இருவரும் பேசவில்லை. பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்துக்கு மோடி அழைப்பு விடுக்கவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பார்வையிலான விசாரணை நடைபெறவேண்டும்’ என்று தெரிவித்தார்.



    மேலும் படிக்க... கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: