மத்திய பாதுகாப்பு படை செய்தது இனப்படுகொலை - 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கடும் சாடல்

மத்திய பாதுகாப்பு படை செய்தது இனப்படுகொலை - 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மம்தா பானர்ஜி கடும் சாடல்

மம்தா பானர்ஜி

துணை ராணுவத்தினரை முற்றுகையிடும்படி, மக்களை மம்தா பானர்ஜி தூண்டியதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். அப்பாவி மக்களை பாதுகாப்பு படை வீரர்கள் இனப்படுகொலை செய்துள்ளதாக மம்தா சாடியுள்ளார்.

  • Share this:
    மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமை, நான்காம் கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, கூச் பெகார் மாவட்டம், சித்தால் குச்சி பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல அதே மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூச் பெகார் மாவட்டத்துக்கு அரசியல் பிரமுகர்கள் செல்ல 72 மணி நேரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில்,  மேற்கு வங்கத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணா கட் பகுதியில் வாகன பிரசாரம் மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, உயிரிழந்தவர்களில் 4 பேருக்கு மட்டுமே மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளதாகவும், பலியான மற்றொரு நபரான ஆனந்த் பர்மன் ராஜ்வன்ஷி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், மம்தா அனுதாபம் தெரிவிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இது மோசமான அரசியல் எனவும் அவர் விமர்சித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததும் அரசியல் ரீதியான வன்முறைகள் முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.

    இதற்கிடையே, பர்தாமன் பகுதியில் சக்கர நாற்காலியுடன் சாலையில் சென்று, முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு சேகரித்தார். முன்னதாக, செய்தியாளர் சந்திப்பின் போது, கூச் பெகாரில் பலியானவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிய மம்தா ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கலவரத்தை தடுக்க தடியடி நடத்தியிருக்கலாம் என்றும், துப்பாக்கியால் கால் மூட்டுக்கு கீழே சுட்டிருக்கலாம் எனவும் கூறினார். ஆனால் உயிரிழந்தவர்கள் உடலின் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், இது இனப்படுகொலை என்றும் மம்தா புகார் தெரிவித்தார்.  இந்நிலையில், கோல்போகார், நக்சல்பரி ஆகிய பகுதிகளில் வரும் 14ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: