வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்களையும், பிரிவினை அரசியலில் ஈடுபடுபவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 21 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 59 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆம் ஆத்மி, மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் மம்தா பானர்ஜி, ”டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெற்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துக்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்களையும், பிரிவினை அரசியலில் ஈடுபடுபவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Also See...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.