• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெட்ரோல்,டீசல் மூலம் ரூ.4 லட்சம் கோடி சம்பாதித்த மத்திய அரசு: திருப்பித் தர மம்தா வலியுறுத்தல்!

பெட்ரோல்,டீசல் மூலம் ரூ.4 லட்சம் கோடி சம்பாதித்த மத்திய அரசு: திருப்பித் தர மம்தா வலியுறுத்தல்!

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

தேர்தல் காரணமாகவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதாகவும் தேர்தல் முடிந்த பின்னர் அவற்றின் விலை மீண்டும் அதிகரிக்கும் என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலையேற்றம் மூலம் மத்திய அரசு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அந்த நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் மீது அதிக வரியை விதித்து அதிக விலைக்கு விற்றதன் மூலம் மத்திய அரசு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்போது, மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் (பாஜக) விரும்புகிறார்கள். மாநிலங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

    “எண்ணெய் விலை பற்றி பாடம் நடத்துபவர்கள் முதலில் மாநில அரசுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும் என்று பதில் சொல்ல வேண்டும். எங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை” என்று தெரிவித்த அவர், பெட்ரோல், டீசல், எரிவாயு மூலம் கிடைத்த வருவாயை மாநிங்களுக்கு மத்திய அரசு சரிசமமாக பிரித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    தேர்தல் காரணமாகவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதாகவும் தேர்தல் முடிந்த பின்னர் அவற்றின் விலை மீண்டும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார்.

    இதையும் படிக்க: ரஃபேல் விவகாரத்தில் புதிய திருப்பம்: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!


    முன்னதாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் தலா ரூ.5, ரூ.10ஐ மத்திய அரசு குறைத்தது. இதேபோல், மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த வரி குறைக்கப்பட்டது. இதனிடையே, அந்தந்த மாநில பாஜகவினரும் எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதோடு போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

    மேலும் படிக்க: பெட்ரோல் விலையை ஏற்றிய முட்டாள்தான் குறைக்க வேண்டும்: மத்திய அரசை கடுமையாக விமர்சித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: