ஃபோனி புயல் எச்சரிக்கை: இரண்டு பிரசாரத்தை ரத்து செய்த மம்தா பானர்ஜி!

அப்போது புரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. புயலின் மையப்பகுதி புரியில் கரையை கடக்கும் போது மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

ஃபோனி புயல் எச்சரிக்கை: இரண்டு பிரசாரத்தை ரத்து செய்த மம்தா பானர்ஜி!
மம்தா பானர்ஜி
  • News18
  • Last Updated: May 3, 2019, 6:52 PM IST
  • Share this:
ஃபோனி புயல் காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்துவரும் இரண்டு நாள்களுக்கு பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஃபோனி புயல் இன்று காலை 8 மணி முதல் ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கியது. ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்த்பாலி இடையே காலை 8 மணியளவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது மணிக்கு 185 முதல் 195 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

கடற்கரையோரங்களில் உள்ள விடுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகின. பின்னர் 11 மணி அளவில் புயல் கரையைக் கடந்தது. அப்போது புரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. புயலின் மையப்பகுதி புரியில் கரையை கடக்கும் போது மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.


மேலும், இந்தப் புயல் நாளை மேற்கு வங்க மாநிலம் கங்கைப் பகுதியைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால், மேற்கு வங்கத்தில் பெரும் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மம்தா பானர்ஜி ட்விட்டர் பதிவில், ‘ஃபோனி புயலின் காரணமாக பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு நான் பங்கேற்க இருந்த பேரணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்’என்று பதிவிட்டுள்ளார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: May 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading