ஒட்டு கேட்கிறார்கள்; என்னுடைய போனின் கேமராவை ப்ளாஸ்டர் போட்டு ஒட்டியுள்ளேன் - மத்திய அரசை சாடிய மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

செல்போனை ஒட்டுக் கேட்பதால் நான் என்னுடைய மொபைல் போனில் கேமராவை ப்ளாஸ்டர் போட்டு ஒட்டியுள்ளேன் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஒ. என்ற நிறுவனம் உளவு பார்க்கும் பெகாசஸ் என்ற மென்பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த மென்பொருள் மூலம், செல்போனில் பகிரப்படும் தகவல்கள், உரையாடல்களை உளவு பார்க்க முடியும். இந்நிலையில், இந்த மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள சிலரின் செயல்பாடுகள் மற்றும் ரகசியங்களை கண்காணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

    இதில், இந்தியாவில் உள்ள இரு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தவைர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்ககளின் செல்போன் உரையாடல், தகவல் பறிமாற்றங்களை கண்காணித்ததாக கூறப்படுகிறது. மேலும், முன்னணி ஊடகங்கள் மற்றும் அதன் செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்களின் செல்போன் உரையாடலும் சட்டவிரோதமாக கண்காணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதில், ராகுல் காந்தி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் எண்கள், மற்றும் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டவர்களும் அடங்கும். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிவருகின்றர். செல்போன் ஒட்டுகேட்பு விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மக்களவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பாக யாரையும் அதிகாரப்பூர்வமாக உளவு பார்க்கவில்லை. இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை மத்திய அரசு மீது சுமத்துகின்றனர்’ என்று விளக்கம் அளித்தார்.

    இந்தநிலையில், தியாகிகள் தினத்தையொட்டி ஆன்லைன் வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பெகாசஸ் விவகாரத்தை சுட்டிக்காட்டி, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், ‘ஜனநாயகத்தை உருவாக்கும் ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய மூன்றிலும் பெகாசஸ் ஊடுருவி உள்ளது. பெகாசஸ் மிகவும் ஆபத்தானது. எனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இப்போது மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியாத நிலையில் உள்ளேன். பெகாசஸ் செயலி மூலம் ஒட்டு கேட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரிக்கவேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நான் என்னுடைய போனின் செல்போன் கேமராவை ப்ளாஸ்டர் போட்டு ஒட்டியுள்ளேன். ஏனென்றால் அவர்கள் எல்லாத்தையும் ஒட்டு கேட்கிறார்கள். அது வீடியோவாக இருந்தாலும் சரி ஆடியோவாக இருந்தாலும் சரி. மத்திய அரசையும் இதேபோல் ஒட்டவேண்டும். இல்லாவிட்டால் நாடு அழிந்துவிடும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: