Home /News /national /

ஒரே மேடையில் மம்தா பானர்ஜி - பிரசாந்த் கிஷோர்... வதந்திகளுக்கு திரிணாமூல் காங்கிரஸ் முற்றுப்புள்ளி

ஒரே மேடையில் மம்தா பானர்ஜி - பிரசாந்த் கிஷோர்... வதந்திகளுக்கு திரிணாமூல் காங்கிரஸ் முற்றுப்புள்ளி

திரிணாமூல் காங்கிரஸ் முக்கிய தலைவர் சந்திரிமா, ஐபேக் நிறுவனம் தனது சோசியல் மீடியா கணக்குகளை தவறாக பயன்படுத்துகிறது என்று  வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் முக்கிய தலைவர் சந்திரிமா, ஐபேக் நிறுவனம் தனது சோசியல் மீடியா கணக்குகளை தவறாக பயன்படுத்துகிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் முக்கிய தலைவர் சந்திரிமா, ஐபேக் நிறுவனம் தனது சோசியல் மீடியா கணக்குகளை தவறாக பயன்படுத்துகிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

    மம்தா பானர்ஜிக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ள நிலையில், இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் ஒரே மேடையில் பங்கேற்று வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர். இந்தியாவின் முன்னணி தேர்தல் பிரசார நிபுணராக கருதப்படும் பிரசாந்த் கிஷோர் தேசிய அளவில் பல்வேறு கட்சிகளுக்கு பணியாற்ற வருகிறார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், பிரசாந்தின் ஐபேக் நிறுவனம் திமுகவுக்காக பணியாற்றியது.

    இதேபோன்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிகாகவும் உழைத்தது. இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க ஆட்சி அதிகாரத்தில் ஐபேக் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையும் படிங்க -ரஷ்யா - உக்ரைன் மோதல்: மருத்துவக் கல்வி நிறுவனம் அமைக்க தீவிரம் காட்டும் ஆனந்த் மஹிந்திரா

    குறிப்பாக மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரான அபிசேக் பானர்ஜிக்கும், ஐபேக் நிறுவனத்திற்கும் இடையே மோதல் வலுவடைந்திருப்பதாக தகவல்கள் பரவின. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான சந்திரிமா பட்டாச்சார்யா, ஐபேக் நிறுவனம் தனது சோசியல் மீடியா கணக்குகளை தவறாக பயன்படுத்துகிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த ஐபேக், மம்தா கட்சி தலைவர்களின் எந்தவொரு அக்கவுன்ட்டையும் தாங்கள் கையாளவில்லை என்று விளக்கம் அளித்திருந்தது. மேலும், திரிணாமூல் - ஐபேக் இடையிலான உரசல் அதிகரித்திருப்பதாகவும், இனி எந்த தேர்தலிலும் மம்தா கட்சிக்காக ஐபேக் பணியாற்றாது என்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.



    இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜியுடன், பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றார். அவருடன் அபிசேக் பானர்ஜி, மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சுப்ரதா பக்சி ஆகியோரும் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க - ''தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்று நாங்கள்தான்'' : ஆம் ஆத்மி தலைவர்கள் உற்சாகம்

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக அபிசேக் பானர்ஜி கருதப்படுகிறார். அக்கட்சியில் மூத்த நிர்வாகிகள் பல்வேறு பொறுப்புகளை கைவசம் வைத்துள்ளனர். இதனால், இளைஞர்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீது பற்றுதல் இல்லாமல் இருப்பதாக அபிசேக் பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, கட்சியில் நபர் ஒருவருக்கு ஒரேயொரு பதவிதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Mamata banerjee, Prashant Kishor

    அடுத்த செய்தி