முகப்பு /செய்தி /இந்தியா / Mamata Banarjee: முதல்வராக பதவியேற்றார் மம்தா பானர்ஜி!

Mamata Banarjee: முதல்வராக பதவியேற்றார் மம்தா பானர்ஜி!

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று பதவியேற்றுகொண்டார்

  • Last Updated :

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று பதவியேற்றுகொண்டார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றது.   ஆட்சியமைக்க  148 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தாலே போதும் என்ற நிலையில்,  292 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில்  213 தொகுதிகளில் வெற்றிப் பெற்று அக்கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக கருதப்பட்ட பாஜக 77 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக வலு பெற்றுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக 3வது முறையாக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்றுக்கொண்டார்.   கொரொனா பரவல் காரணமாக, கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில்  இன்று காலை 10.45 மணிக்கு  எளிய முறையில் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். ஆளுநர் ஜெக்தீப் தன்கர், மம்தா பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கு முன்பாக கடந்த 2011, 2016 ஆகிய சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு அவர் முதல்வராக பதவியேற்ற நிலையில், தற்போது ஹாட்ரிக் முறையாக மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார்.

எனினும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகளில் தோல்வி அடைந்தார். எனினும், அவர் முதலமைச்சராக பதவியேற்க சட்டத்தில்  இடம் இருப்பதால், மம்தா இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் அவர் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும்.

நந்திகிராம் தேர்தல் முடிவு தொடர்பாக நீதிமன்றத்தை நாட அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி  முடிவு செய்துள்ளது.  தீர்ப்பு சாதகமாக வராதப்பட்சத்தில் வேறு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினராக இல்லாமலேயே முதலமைச்சராக பதவியேற்பது மம்தா பானர்ஜிக்கு இது முதல்முறையல்ல. கடந்த 2011ம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சியமைத்தபோது , சட்டமன்ற உறுப்பினராக இல்லாமலேயே மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றார். சில மாதங்கள் கழித்து, போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Mamata banerjee, West Bengal Assembly Election 2021