• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘என் மக்கள் மீது நம்பிக்கை உள்ளது!’ - பா.ஜ.க சவாலை ஏற்று நந்திகிராமில் மம்தா போட்டி

‘என் மக்கள் மீது நம்பிக்கை உள்ளது!’ - பா.ஜ.க சவாலை ஏற்று நந்திகிராமில் மம்தா போட்டி

மமதா பானர்ஜி

மமதா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸில் 50 பெண்கள், 42 இஸ்லாமியர்கள், 79 தாழ்த்தப்பட்டோர் மற்றும் 17 பழங்குடியின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    மேற்கு வங்க அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. அங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையேயான வார்த்தை மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதன்காரணமாக சினிமா நட்சத்திரங்களில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் வரை தேர்தல் பிரசாரத்தில் களமிறக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. திரிணாமூல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை பா.ஜ.க வசம் இழுக்கும் யுக்திகளும் நடந்து வருகிறது. திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் முதல் வார்ட் கவுன்சிலர்கள் வரை பா.ஜ.கவில் இணைந்து வருகிறார்கள்.

    தமிழ்நாட்டின் இந்த லேடியா? குஜராத்தின் மோடியா? யார் சிறந்த நிர்வாகி என 2014 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். மேற்கு வங்கத்தில் ஏறக்குறைய அதே காட்சிதான் அரங்கேறி வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முடிந்தால் நந்திகிராம் தொகுதியில் நிற்கச் சொல்லுங்கள். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வென்று காட்டுகிறோம் என மார்த்தட்டுகிறது உள்ளூர் பா.ஜ.க. மம்தாவுக்கு எதிராக எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் நாங்கள் வென்று காட்டுவோம் என்கிறார்கள்.

    2016 சட்டமன்றத் தேர்தலில் நந்தி கிராம் தொகுதியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. சுவேந்து அதிகாரி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை மனதில் வைத்துதான் மம்தா நந்தி கிராம் தொகுதியில் போட்டியிடுவதாக டிசம்பர் மாதம் அறிவித்தார். இதற்கிடையில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்துவிட்டார். மம்தா இந்த தொகுதியில் போட்டியிட்டால் நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என சுவேந்து அதிகாரி பாஜகவுக்கு நம்பிக்கையளித்துள்ளார். மம்தாவின் அறிவிப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட பா.ஜ.க-வினர் நந்தி கிராமில் முடிந்தால் போட்டியிடுங்கள் என சவால் விடுத்தனர்.

    இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் 50 பெண்கள், 42 இஸ்லாமியர்கள், 79 தாழ்த்தப்பட்டோர் மற்றும் 17 பழங்குடியின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    ‘நாம் வங்காளத்தில் வசிப்பவர்கள். வங்காளத்தின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, மரபு ஆகியவற்றை நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். பா.ஜ.க-வை இங்கு ஆட்சியில் உட்காரவைத்தால் நம் மாநிலத்தில் அழிவை ஏற்படுத்தும் என மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். என் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது” என மம்தா கூறியுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: