ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: களத்தில் இறங்கிய மல்லிக்கார்ஜுன கார்கே!

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: களத்தில் இறங்கிய மல்லிக்கார்ஜுன கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி

மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது தலித் தலைவராக இருப்பார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் களம் காண உள்ள நிலையில் திக் விஜய் சிங் போட்டியில் இருந்து விலகுவார் என தெரிகிறது.

  காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். மூத்த தலைவர்களில் இதுவரை சசிதரூர், திக் விஜய் சிங் ஆகியோர் வேட்பு மனுவை பெற்றுள்ளனர். முதலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், உட்கட்சி பிரச்னையால் பின் வாங்கினார். இந்த சூழலில் தற்போது மல்லிகார்ஜூன கார்கேயும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, 1972ஆம் ஆண்டில் இருந்து 2009 வரை தொடர்ச்சியாக 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2009 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அமைச்சராக பதவி வகித்தார்.

  இதனையடுத்து 2013ஆம் ஆண்டு ரயில்வே துறை அமைச்சராக பணியாற்றினார். இதனைதொடர்ந்து 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராக பதவி வகித்தார். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவராக பதவி வகிக்கிறார்.

  இதையும் வாசிக்க: 2023-ல் மீீண்டும் ஆட்சியை பிடிப்பதே இலக்கு - சச்சின் பைலட்

  மேலும் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது தலித் தலைவராக இருப்பார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிகம் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால் இவர் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.

  23 பேரைக் கொண்ட அதிருப்தியாளர்கள் அணியைச் சேர்ந்த முகுல் வாஸ்னிக்கும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நட்பார்ந்த போட்டி இருக்கும் என சசிதரூர் தெரிவித்துள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Congress leader, Mallikarjun Kharge, Rahul gandhi, Shashi tharoor