ஹோம் /நியூஸ் /இந்தியா /

சாத்வி பிரக்யா போட்டியிட தடை கோரி வழக்கு! பா.ஜ.கவுக்கு நெருக்கடி

சாத்வி பிரக்யா போட்டியிட தடை கோரி வழக்கு! பா.ஜ.கவுக்கு நெருக்கடி

சாத்வி பிரக்யா தாகுர்

சாத்வி பிரக்யா தாகுர்

2006-ம் ஆண்டு மாலேகான் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் பிரக்யா தாகுர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பா.ஜ.க சார்பில் போபால் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகுர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 6-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் உமா பாரதி, நரேந்திர சிங் தோனம், சிவராஜ் சிங் சௌஹான் யாரேனும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

போபால் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக சாத்வி பிரக்யா தாகுர் போட்டியிடுகிறார். 2006-ம் ஆண்டு மாலேகான் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் பிரக்யா தாகுர். அவர், தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவரை, வேட்பாளராக அறிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரை, வேட்பாளராக அறிவித்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மகனை இழந்த நிசார் சயித், வியாழக்கிழமை மத்திய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘பிரக்யா தாகுர் தற்போது ஜாமினில் தான் வெளியில் உள்ளார். அவர், விசாரணைக்கு ஆஜராக வேண்டிய தேவை இருக்கும். வழக்கு விசாரணை முடியும் வரை, அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கவேண்டும்.

தாகுர், உடல்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு ஜாமின் பெற்றுள்ளார். இந்த கோடை வெயிலில் அவரால் தேர்தலில் பங்கேற்க முடிகிறது என்றால், அவர், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார் என்று அர்த்தம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரத்தி மத்திய புலனாய்வு அமைப்பு நீதிபதி வி.எஸ்.படல்கர், ‘இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பும்(என்.ஐ.ஏ), தாகுரும் பதிலளிக்கவேண்டும்’ என்று கூறி வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see:

First published:

Tags: Bhopal S12p19, BJP, Elections 2019, Lok Sabha Election 2019