இனி அரசு ஊழியர்கள் கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது... செக் வைத்த அரசு!!

இனி அரசு ஊழியர்கள் கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது... செக் வைத்த அரசு!!

சமீபத்தில் மூன்று பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இப்படி அடுத்தடுத்து ஒரே சமயத்தில் மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்டதால் மாநிலம் முழுவதும் வரதட்சணைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

 • Share this:
  கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்யும் சம்பவம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆளும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  அந்தவகையில், கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் அனுபாமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள அரசின் கீழ் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் தாங்கள் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் வரதட்சணை கேட்கவோ, வாங்கவோ, வற்புறுத்தவோ இல்லை என்பதை குறிப்பிட்டு கையெழுத்திட்டு அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

  அந்த படிவத்தில் அரசு ஊழியர், ஊழியரின் தந்தை, ஊழியரின் மனைவி, மாமனார் உள்ளிட்டோர் கையெழுத்திட வேண்டும். இந்த படிவங்களை அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து பெற்று வருடத்திற்கு இரண்டு முறை (ஏப்ரல், அக்டோபர்) சம்மந்தப்பட்ட மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also read: மாமனாரின் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற புதுப்பெண் குண்டு பாய்ந்து உயிரிழப்பு!

  மேலும், அந்த அறிவிப்பில், வரதட்சணை கொடுப்பதோ, பெறுவதோ சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். மேலும், இதற்கான சிறை தண்டனை 5 வருடத்திற்கு குறையாமல் இருக்கும் என்றும், ரூ.15,000க்கும் குறையாமல் அபராதம் விதிக்கப்படும் என்றும், அல்லது வரதட்சணைக்கு ஏற்ப அபராதம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கேரளாவில் சமீபத்தில் மூன்று பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இப்படி அடுத்தடுத்து ஒரே சமயத்தில் மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்டதால் கேரளா முழுவதும் வரதட்சணைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

  வரதட்சணை கொடுமை காரணமாக ஏற்படும் மரணங்கள் கேரளாவில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஆளும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரதட்சணை தடை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து வரதட்சணை தடை சட்டம் திருத்தப்பட்டது.

  கேரளாவில் அமலில் உள்ள வரதட்சணை தடை சட்டம் 1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாகும். இந்த சட்டத்தின்படி வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்கு உரிய குற்றமாகும். திருமண பந்தத்தின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு சொத்தாகவோ அல்லது மதிப்பு மிக்க பாதுகாப்பு பத்திரமாக கொடுப்பதும் அல்லது கொடுப்பதாக ஒப்புக் கொள்வதும் சட்டப்படி தவறாகும்.

  இதுதொடர்பாக மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறும்போது, இப்போது வரதட்சணை தடை சட்டத்தை அமல்படுத்தும் அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் , வரதட்சணை தடை சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளாக செயல்படுவார்கள்.

  இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இயக்குநர் இப்போது வரதட்சணை தடுப்பு சட்டத்தின் தலைமை அலுவலராக இருப்பார். இப்போதைய காலகட்டத்தில் வரதட்சணை தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளதால், வரதட்சணை வழக்குகளில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Esakki Raja
  First published: