பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது அளிப்பு

பிரதமர் மோடி கவுரவிப்பு

மாலத்தீவு அதிபருக்கு பரிசாக, உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றையும் பிரதமர் மோடி அளித்தார்.

  • Last Updated :
  • Share this:
மாலத்தீவு சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் நிஷான் இசுதீன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் இம்ராகிம் முகமது சோலிஹ் உற்சாக வரவேற்பு அளித்தார். மாலத்தீவு அதிபருக்கு பரிசாக, உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றையும் பிரதமர் மோடி அளித்தார்.

முன்னதாக இந்திய மாலத்தீவு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அங்குள்ள 2 பாதுகாப்பு திட்டங்களை இருநாட்டு தலைவர்களும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

கடற்படை கண்காணிப்பு ரேடார் மையம் மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு பயிற்சி மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்து இருநாட்டு தலைவர்களும் பேசினர்.

Published by:Yuvaraj V
First published: