• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தந்த மாலத்தீவு அரசின் புதிய உத்தரவு!

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தந்த மாலத்தீவு அரசின் புதிய உத்தரவு!

மாலத்தீவு

மாலத்தீவு

பாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரையிலான திரைத்துறையினருக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்தது மாலத்தீவுகள் தான்.

  • Share this:
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்குள் நுழைய தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோரோனா பரவல் காரணமாக மாதக்கணக்கில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, இதன் பின்னர் நோய்த்தொற்று பரவல் ஓரளவு குறையத்தொடங்கியதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பலரும் சுற்றுலா தலங்களை நாடிச் சென்றனர். பாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரையிலான திரைத்துறையினருக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்தது மாலத்தீவுகள் தான்.

மாலத்தீவு என்பது 1192 தீவுகளை உள்ளடக்கிய, 26 இயற்கையான பவளத்தீவுகள் கொண்டிருக்கும் ஒரு நாடாகும். இது சுற்றுலாவை பிரதானமாக கொண்டிருக்கும் ஒரு சிறிய தேசமாகும்.

இந்நிலையில் சமீப நாட்களாக மாலத்தீவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அங்கு நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 4,978ல் இருந்து 11,629ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க:    கும்பமேளாவில் இருந்து திரும்பியவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பியதால் அதிர்ச்சி!


 

இதனையடுத்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாலத்தீவுகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாடுகளில் கடந்த 14 நாட்களாக தங்கியிருந்திருந்தாலும் மாலத்தீவுக்கு வர அனுமதி மறுக்கப்படுவதாகவும் இந்த தற்காலிக தடையானது இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

 



அதே நேரத்தில் உரிய விசா வைத்திருக்கும் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் மாலத்தீவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் தங்கியிருக்கும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விரைவில் சொந்த நாடுகளுக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மாலத்தீவில் இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கவலையடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: