தமிழகத்தில் ஓணம் பண்டிகை: ஊரடங்கு காரணமாக வீடுகளில் எளிமையாக மலையாள மக்கள் கொண்டாட்டம்

நாடெங்கும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

  • Share this:
மலையாள மக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, வாழை மரங்களால் அலங்கரித்துள்ளனர். கேரளாவில் கடந்த ஆண்டு பெருவெள்ளம், நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக ஓணம் பண்டிகை சற்று களையிழந்து காணப்படுகிறது. இருப்பினும் தத்தமது வீடுகளில் ஓணம் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஓணம் பண்டிகை கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிங்காரி மேளம் முழங்க வீதி ஊர்வலங்கள் ஏதும் இன்றி எளிமையான முறையில் கொண்டாடப்படுகிறது. கோயில்கள், வீடுகளில் மக்கள் அத்தப்பூ கோலம் போட்டு, புத்தாடை அணிந்தும் திருவோணம் பண்டிகையை கொண்டாடினர்.

Also read: உயிரிழந்த தன் காளையின் நினைவாய் முழு உருவச்சிலை வைத்த விவசாயி


இதேபோன்று கேரளாவின் அருகே உள்ள மற்றொரு மாவட்டமான கோவையில் உள்ள மலையாளம் பேசும் மக்கள் வழக்கமான ஆரவாரமின்றி எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். கொரோனா தொற்று காரணமாக சித்தாபுதூர அய்யப்பன் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலின் வாசலில் நின்று சமூக இடைவெளியுடன் சாமி கும்பிட மட்டும் அனுமதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் வாழும் மலையாள மக்கள் ஊரடங்கால் தங்கள் சொந்த ஊரான கேரளாவுக்கு செல்ல முடியாத நிலையில், தங்கள் வீடுகளிலேயே எளிமையாக ஓணம் பண்டிகையை கொண்டாடினர். புத்தாடை அணிந்து, வாசல் முன்பு பூக்கோலமிட்டு குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று நெல்லையிலும் மலையாள மொழி பேசும் மக்கள் கேரள கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமான புத்தாடைகளை அணிந்து தங்கள் வீடுகளுக்குள்ளேயே விளக்கேற்றி, மலர் கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ள அவர் நல்லிணக்கத்தை கொண்டாடும் ஓணம் பண்டிகை தனித்துவமானது என்றும் இவ்விழா விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் என்றும் கூறியுள்ளார். மேலும் ஓணம் பண்டிகை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படும் சர்வதேச விழா எனவும் கூறியுள்ளார்.

இதே போல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading