Home /News /national /

பிரபல செய்தி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்: தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு

பிரபல செய்தி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்: தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு

மீடியா ஓன் ஒளிபரப்பு நிறுத்தம்

மீடியா ஓன் ஒளிபரப்பு நிறுத்தம்

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி வழங்க மறுத்துவிட்டதால் மீடியா ஒன் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டது. இதையடுத்து மீடியோ ஒன் சேனலின் ஒளிபரப்பு இன்று மதியம் நிறுத்தப்பட்டது

மேலும் படிக்கவும் ...
    மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியலிலிருந்து பிரபல மலையாள செய்தி தொலைக்காட்சி சேனலான மீடியா ஓன் (Media one) பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. எனினும்,  மத்திய அரசின் நடவடிக்கைக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    மலையாள செய்தி தொலைக்காட்சி சேனலான மீடியா ஓன் (Media one) கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. 30 செப்டம்பர் 2011 முதல் 29 செப்டம்பர் 2021ம் ஆண்டுவரை இந்த தொலைக்காட்சிக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2031ம் ஆண்டுவரை உரிமத்தை நீட்டிக்கக் கோரி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் மீடியா ஒன் சேனல் நிர்வாகம் தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி வழங்க மறுத்துவிட்டதால் மீடியா ஒன் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டது. இதையடுத்து மீடியோ ஒன் சேனலின் ஒளிபரப்பு இன்று மதியம் நிறுத்தப்பட்டது.  இது தொடர்பாக மீடியா ஒன்  ஆசிரியர் பிரமோத் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது, ஆனால் சேனல் இன்னும் அது தொடர்பான  விவரங்களைப் பெறவில்லை. இந்த தடை குறித்த விவரங்களை மீடியாஒன் டிவிக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

    மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்பு  அமைச்சகத்தின் தடைக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. எவ்வித தேச விரோத செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும் மிகப்பெரிய அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாலும் தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.

    இதையும் படிங்க: 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: புதிய தளர்வுகளுடன் தேர்தல் கட்டுப்பாடுகள் பிப்.11ம் தேதி வரை நீட்டிப்பு!!


    இந்த மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அதுவரை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதித்தது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: News, TV Channel

    அடுத்த செய்தி