Home /News /national /

இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுகிறேன் - பிரபல இயக்குநர் அறிவிப்பு

இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுகிறேன் - பிரபல இயக்குநர் அறிவிப்பு

அலி அக்பர்

அலி அக்பர்

58 வயதான அலி அக்பர் தனது பெயரை ராம் சிங் என மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கும் தனது குடும்பத்திற்கும்  இனி மதம் கிடையாது. அதுதான் தங்களின் முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பை சிலர் கொண் டாடியதாக சர்ச்சை எழுந்த நிலையில், இதற்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுவதாக பிரபல மலையாள இயக்குநர் அலி அக்பர் அறிவித்துள்ளார்.

    முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் தமிழகத்தின் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளன. உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட பிற ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அதேவேளையில், ஒருசில விஷமிகள் பிபின் ராவத்தின் இறப்பு சம்பவத்தை வைத்து கண்டிக்கத் தக்க வகையிலானபதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.  அந்த விகையில் சிலர் பிபின் ராவத் இறப்பை கொண்டாடும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை கண்டித்து  மலையாள இயக்குநர் அலி அக்பர்,  பதிவு ஒன்றை வெளியிட்டதற்காக அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

    இதையடுத்து, புதிய பக்கம் ஒன்றை தொடங்கிய அலி அக்பர், தனது மதத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.  எந்த ஆடையுடன் நான் பிறந்தேனோ அதனை துறக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: Omicron தொற்று பரவல்: மும்பையில் 144 தடை உத்தரவு அமல்


    இது தொடர்பான பதிவில்,  'ஸ்மைலியுடன் ரியாக்ட் செய்தவர்களுக்கு எதிராகப் பேசிய ஐந்து நிமிடங்களில் எனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.  இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஒப்புக்கொள்ளவும் முடியாது.  அதனால் நான் என் மதத்தை விட்டு வெளியேறுகிறேன். எனக்கும் என் குடும்பத்திற்கும்  இனி மதம் கிடையாது. அதுதான் எங்களின் முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

    58 வயதான அலி அக்பர் தனது பெயரை ராம் சிங் என மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். கேரளாவின் கலாச்சாரத்தை கடைபிடித்ததற்காக கொல்லப்பட்டவர் ராமசிம்மன் (1947ல் இஸ்லாமிலிருந்து  இந்து மதத்துக்கு மாறியதற்காக கொல்லப்பட்டார்),  இனி அலி அக்பர் ராம்சிங் என்று அழைக்கப்படுவார். இதுதான் சிறந்த பெயர் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் பற்றி புகாரளிக்க தனி போர்ட்டல்: மத்திய அரசு


    1988ஆம் ஆண்டு கேரள அரசின் சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதை பெற்ற அலி அக்பர், தற்போது, 1921: புழா முதல் புழா வரை என்னும் பெயரில் திரைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார்.  பாஜகவின் மாநில குழு உறுப்பினராக இருந்த அலி அக்பர் கடந்த அக்டோபர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Indian Army Commander Bipin Rawat, Kerala

    அடுத்த செய்தி