பெண்களை இரண்டாக பிளப்போம் என மிரட்டல் விடுத்த நடிகர் மீது வழக்குப்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டாக பிளப்போம் என பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண்களை இரண்டாக பிளப்போம் என மிரட்டல் விடுத்த நடிகர் மீது வழக்குப்பதிவு
நடிகர் கொல்லம் துளசி
  • News18
  • Last Updated: October 13, 2018, 2:33 PM IST
  • Share this:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டாக பிளப்போம் என மிரட்டலாக பேசிய திரைப்பட நடிகர் கொல்லம் துளசி மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு ஆதரவும் அதே சமயத்தில் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பின. தீர்ப்பை எதித்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என கேரள அரசும், கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் கூறின.


தீர்ப்புக்கு எதிராக கேரளா மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. கொல்லத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் பந்தளம் அரச குடும்பத்து உறுப்பினர்கள், பாஜக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் கொல்லம் துளசி, “சபரிமலைக்குள் நுழையும் பெண்கள் இரண்டாக பிளக்கப்பட்டு, ஒரு பகுதி டெல்லியிலும் மற்றொரு பகுதி முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்திலும் வீசப்படுவார்கள்” என பேசினார்.

பெரும் பரபரப்பை உண்டாக்கிய அவரது இந்த பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. இதனை அடுத்து, தனது பேச்சுக்கு கொல்லம் துளசி மன்னிப்பு கேட்டார். இதற்கிடையே, கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. கொல்லம் துளசி மீது போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பாஜக ஆதரவாளராக இருக்கும் கொல்லம் துளசி கடந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி ஆதரவுடன் குந்தாரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: October 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்