கோழிக்கோடு விமானவிபத்து தொடர்பான விசாரணை 60% நிறைவடைந்தது - மலப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

kerala kozhikode crash

60 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளது எனவும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
விபத்து ஏற்பட்ட கோழிக்கோடு விமான நிலையத்தில் மீண்டும் வர்த்தகரீதியான விமான சேவை தொடங்கியது எனவும், 60 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளது எனவும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று அல்லது நாளை முழுமையான விசாரணை நிறைவடையும்
விபத்து குறித்த முழுமையான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், ஏற்கனவே கருப்புப்பெட்டி கைப்பற்றப்பட்டுள்ளது அதனை ஆய்வகத்தில் கொடுத்து பின்னர் விவரங்கள் சேகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்று விமான விபத்தின் போது களத்தில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் உட்பட களப்பணி ஆற்றிய அனைவரும் தனிமை படுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், விமான விபத்தில் உயிரிழந்த 18 பேரின்  உடல்களை உறவினர்களிடம் வழங்கி விட்டோம். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 23 பேரில் 7 பேருக்கு முன்னேற்றம் காணப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 16 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48 பேருக்கு மேலாக இல்லத்திற்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Published by:Gunavathy
First published: