ரெய்சினா பேச்சுவார்த்தை 2022 நிகழ்வை பிரதமர் நரேந்திர
மோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வ்ரூசுலா வான் டோர் டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தனர். வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச பொருளாதாரம் ஆகியவற்றை குறித்த கருத்தரங்கு இந்த நிகழ்வில் நடைபெறும். இதில், 90க்கும் மேற்பட்ட நாடுகளின் 210 பிரதிநிதிகள் பேசவுள்ளனர்.
இந்த நிகழ்வில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அவர் தனது உரையில், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், நாட்டில் எலக்ட்ரிக் வாகனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, "எலான் மஸ்க் இந்தியாவில் வந்து டெஸ்லா கார்களை தயாரித்து விற்பனை செய்ய நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அதற்கு எந்த தயக்கமும் தடையும் இல்லை. நம்மிடம் அதற்கான திறன் உள்ளன. தொழில்நுட்ப வசதி உள்ளன. இதன் மூலம் காரின் விற்பனை விலையும் குறையும்.
இந்தியா மிகப்பெரிய சந்தையாகும். இங்கு ஏற்றுமதிக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, எலான் மஸ்க் தாராளமாக இந்தியாவில் டெஸ்லா காரை உற்பத்தி செய்து விற்கலாம். அதேவேளை, சீனாவில் கார்களை உற்பத்தி செய்து அவற்றை இந்தியாவில் வந்து விற்க நினைத்தால் அதை நாங்கள் ஏற்க முடியாது" என்றார்.
மின்சார வாகனங்கள் குறித்து பேசுகையில் அவர், "இந்தியா சந்தையில் மின்சார வாகனங்களுக்கு சிறப்பான சூழல் உள்ளது. மின்சாரப் பேருந்துகளுக்கான தேவை 1300 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே, டெஸ்லா இங்கு மின்சார வாகனத்தை தயாரித்தால் நல்ல லாபம் பெறலாம். இந்தியாவுக்கு நல்ல விலையில் சிறப்பான வாகனங்கள் கிடைக்கும். எனவே, இது இருவருக்கும் வெற்றியான சூழல் தான்.
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கோடை வெப்பம் அதிகம் காணப்படுவதால், பெட்டட்ரிகள் வெடித்து பைக்குகளில் தீவிபத்து ஏற்படலாம். இது கவலைக்குரியது.எனவே, பழுதான வாகனங்களை திரும்பப்பெற அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சார வாகன தொழில்சாலை தற்போது தான் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் தற்போது தடைகளை விதிக்க விரும்பவில்லை.அதேவேளை, பாதுகாப்பு அரசு அதிகபட்ச முக்கியத்துவம் வழங்குகிறது. அதில் சமரசமே கிடையது" என்றார்.
இதையும் படிங்க:
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுப்பு..!!
2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபற்று வரும் இந்த ரெய்சினா பேச்சுவார்த்தை, கடந்தாண்டு கோவிட் பெருந்தொற்று காரணமாக மெய்நிகர் வாயிலாக நடைபெற்றது. இந்த நிகழ்வை ORF(Observer Research Foundation) அமைப்புடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து நடத்துகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.