மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரிய கர்நாடகாவின் விண்ணப்பத்தை இன்று பரிசீலிக்கிறது மத்திய அரசு!

தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி இன்று கர்நாடக அரசின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 19, 2019, 9:01 AM IST
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரிய கர்நாடகாவின் விண்ணப்பத்தை இன்று பரிசீலிக்கிறது மத்திய அரசு!
மேகதாது ஆறு
Web Desk | news18
Updated: July 19, 2019, 9:01 AM IST
காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதிகோரிய விண்ணப்பத்தை இன்று மத்திய அரசின் மதிப்பீட்டுக்குழு பரிசீலிக்க உள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு கர்நாடக அரசு விண்ணப்பித்திருந்தது.

ஜூன் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தில் கர்நாடக அரசின் இந்த முயற்சி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. தமிழக அரசின் ஒப்புதல் இன்றி நடக்கும் இந்த முயற்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அதனால் கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.


மேலும் கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்தில்  சமர்ப்பித்திருந்த அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க அறிவுறுத்துமாறும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி இன்று கர்நாடக அரசின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... பெரும்பான்மையை நிரூபிக்க தயாரானார் குமாரசாமி

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.</
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...