கொரோனாவை கட்டுப்படுத்தும் கிராமங்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு - மகாராஷ்டிரா அரசுக்கு கைகொடுக்குமா?

கொரோனா பரிசோதனை

கிராமப் புறங்களில் போதுமான சுகாதார கட்டமைப்புகள் இல்லை. இதனைக் கருத்தில் கொண்ட முதல்வர் உத்தவ் தாக்கரே பரிசு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

  • Share this:
கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தும் கிராமங்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை குறித்து அம்மாநில கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் கடும் முயற்சியை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் 2வது முறையாக ஒரு வார ஊடரங்கு அமலில் உள்ளது. இதேபோல், நாடு முழுவதும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் கொரோனா பரவல் விகிதங்களுக்கு ஏற்ப கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 60 ஆயிரங்களை கடந்துள்ளது. கிராமங்களில் வைரஸ் தொற்று பரவியுள்ளதால், கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அம்மாநில அரசு உள்ளது. மேலும், அம்மாநிலத்தில் கிராமப் புறங்களில் போதுமான சுகாதார கட்டமைப்புகள் இல்லை. இதனைக் கருத்தில் கொண்ட அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பரிசு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி, வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்கும் கிராமங்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் பரிசாக ரூ. 50 லட்சமும், இரண்டாவது பரிசு ரூ.25 லட்சம், மூன்றாவது பரிசாக ரூ.15 லட்சமும் வழங்கப்படுகிறது. 6 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை கிடைக்க உள்ளது. இது குறித்து பேசிய அம்மாநில கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சர், ஹசன் முன்ஷரிப், இந்தப் போட்டியில் சுமார் 22 வரைமுறைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கிராமங்களில் செயல்பாடுகளை கண்காணிக்க ஒரு கமிட்டி உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அவர், அந்த கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் வெற்றி பெற்ற கிராமம் தேர்தெடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.

Also Read: உத்தரகண்டில் 2,000க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா - அதில் 90% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்றதாக தகவல்! 

கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தும் கிராமத்துக்கு கூடுதலாக ஒரு பரிசும் இருப்பதாக கூறிய அவர், அந்த கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக பரிசுத் தொகைக்கு இணையான நிதி உடனடியாக விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பீர் இலவசமாக வழங்கப்படும் என அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். கொரோனா இல்லாத அமெரிக்காவை உருவாக்க முனைப்பு காட்டி வரும் அவர், தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Also Read:   டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவருடன் மாயமான ஆசிரியை!

இதேபோல், பல்வேறு நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, விளையாட்டு டிக்கெட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி அமெரிக்கர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவித்து வருகின்றனர். இதுவரை 61 விழுக்காடு அமெரிக்கர்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த விழுக்காட்டை 100 விழுக்காடாக மாற்றுவதற்குரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பைடன் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
Published by:Arun
First published: