குடியுரிமை, தேசியவாதம், கூட்டாட்சி ஆகிய பாடங்கள் நீக்கம் - மத்திய அமைச்சர் விளக்கம்

சிபிஎஸ்இ பாடங்களை நீக்கியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம் அளித்துள்ளார்.

குடியுரிமை, தேசியவாதம், கூட்டாட்சி ஆகிய பாடங்கள் நீக்கம் - மத்திய அமைச்சர் விளக்கம்
மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
  • Share this:
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், ஆன்லைன் மூலம் தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் மத்திய அரசானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவிகிதம் வரை பாடங்கள் குறைக்கப்படுவதாக அறிவித்தது. இதனையடுத்து, சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி உள்ளிட்ட சில முக்கியமான அத்தியாயங்கள் நீக்கப்பட்டன.

Also read... சித்த மருந்துகளுக்கு சந்தேகப்பார்வை ஏன்? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி


இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் , மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே சிபிஎஸ்இ பாடப்பிரிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு வேறு உள்நோக்கமில்லை என்று கூறியுள்ளார்.

கணக்கு மற்றும் இயற்பியல் பாடங்களிலும் சில அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்த ஆண்டுக்கான தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்றும் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading